கொவிட் 19 பின்ணணியில் தொடர்பாடல் மற்றும் உளநலம் பற்றிய நிகழ்ச்சி

வடகிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் சுகாதாரக் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டு தொடர்பான தாதியர்களுக்கு கோவிட் தொற்று இலங்கையில் பரவிய நிலையில் தமது வேலைத்தளங்களில் தொடர்பாடல் பற்றி அதற்கு தேவையான உளநல சுகாதார வழிமுறைகள் பற்றி யாழ் போதனா வைத்திய சாலையில் பணி புரியும் மனநோய் வைத்திய நிபுணர் டாக்டர் சிவதாஸ் அவர்களால் விரிவுரை நடத்தப்பட்டது. இது சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் வைத்திய சாலைகளில் சுகாதார மேம்பாட்டு ஸ்தலங்களை அமைப்பதற்கு பொறுப்பான விஷேட பிரிவினால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இதே போல் ஏனைய மாகாணங்களில் உள்ள தாதியர்களுக்கு சிங்கள மொழியில் இதே விடையத்தின் கீழ் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் இனோகா விக்கிரமசிங்க இனால் விரிவுரை வழங்கப்பட்டது.