- வீடு
- செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
வருடாந்த ஊடகவியலாளர்கள் பாராட்டு விழா
தேசிய சுகாதார மேம்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் வினைத்திறனான தொடர்பாடலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், கௌரவ சுகாதார அமைச்சரின் பங்கேற்புடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் (HPB) ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஊடகவியலாளர்கள் பாராட்டு விழா 2025 வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
ஊடகவியலாளர்களுக்கும் சுகாதாரத் துறை சார்ந்த பங்குதாரர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், துல்லியமான, சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சுகாதாரத் தகவல்களை பொதுமக்களுக்கு வினைத்திறனாக கொண்டு சேர்ப்பதை ஊக்குவிப்பதற்குமாக இந்த நிகழ்வு அவர்களை ஒன்றிணைத்தது.
மாறிவரும் தொடர்பாடல் சூழலில், தொலைக்காட்சி, வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் உள்ளிட்ட பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் போன்ற வளர்ந்து வரும் டிஜிட்டல் தளங்களின் பரஸ்பர முக்கியத்துவத்தை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அங்கீகரிக்கிறது. பல்வேறு சமூகங்களை சென்றடைவதற்கும், சுகாதார அறிவை மேம்படுத்துவதற்கும் இந்த அனைத்து வழிகளினூடாகவும் தொடர்புகளை வலுப்படுத்துவது அவசியமானதாகும்.
சுகாதார தொடர்பாடல் மற்றும் மேம்பாட்டிற்கான புதுமையான மற்றும் வினைத்திறனான அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு, ஊடக மற்றும் தொடர்பாடல் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
ஒன்றிணைந்து, நாம் சுகாதாரத் தொடர்பாடலை வலுப்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் சிறந்த விழிப்புணர்வுள்ள ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு பங்களிப்போம்.
English