- வீடு
- செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
Information Environment Assessment tool
உலக சுகாதார அமைப்பின் தலைமையகம் (WHO Headquarters), தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் (WHO SEARO), மற்றும் இலங்கையிலுள்ள உலக சுகாதார அமைப்பின் வதிவிட அலுவலகம் (WHO Country Office) ஆகியவை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் (Health Promotion Bureau) இணைந்து, ‘தகவல் சூழல் மதிப்பீட்டுக் கருவியை’ (Information Environment Assessment tool) கூட்டாக உருவாக்குவதற்கும் வடிவமைப்பதற்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கையில் இரண்டு நாள் பயிலரங்கு ஒன்றை நடத்தின. இதனைத் தொடர்ந்து, தாய்லாந்திலும் இவ்வாறானதொரு கூட்டு உருவாக்கப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
இப்பயிலரங்குகளின் பெறுபேறுகளுடன், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் நடைமுறை அனுபவங்களும் படிப்பினைகளும் இக்கருவியை மேம்படுத்துவதற்கும் மேலும் செம்மைப்படுத்துவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கின.
இந்த ‘தகவல் சூழல் மதிப்பீட்டுக் கருவி’ தற்போது பயன்பாட்டுக்குக் கிடைப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சுகாதாரத் தகவல், தொடர்பாடல், சமூகப் பங்களிப்பு மற்றும் இடர் தொடர்பாடல் (risk communication) ஆகிய துறைகளில் பணியாற்றுவோருக்கு இது ஒரு காலோசிதமான மற்றும் மதிப்புமிக்க வளத்தை வழங்குகிறது.
குறிப்பாக, சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களும் (misinformation) திட்டமிட்ட போலித் தகவல்களும் (disinformation) வேகமாகப் பரவக்கூடிய சூழலிலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தகவல்கள் உருவாக்கப்படும், அணுகப்படும் மற்றும் பகிரப்படும் விதம் உருமாறிவரும் இக்காலகட்டத்தின் விரைவாக மாற்றமடைந்துவரும் தகவல் சூழலில் இது மிகவும் முக்கியமானது. தகவல் சூழலை முறையாகப் புரிந்துகொள்வது, அதிக பதிலளிப்புத்திறன் கொண்டதும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதுமான தொடர்பாடல் அணுகுமுறைகளை வடிவமைக்கவும், பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க ஆதரவளிக்கவும் நமக்கு உதவும்.
English